கொள்ளையடிக்கவே நீட் தேர்வு.. கவர்னர் முன்னிலையில் பொன்முடி பேச்சு..!
கொள்ளையடிக்கவே நீட் தேர்வு.. கவர்னர் முன்னிலையில் பொன்முடி பேச்சு..!
சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் தொடங்கியது. பல்கலைக்கழக வேந்தரான கவர்னர் ரவி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் பங்கேற்றனர்.
பட்டமளிப்பு விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசுகையில், “இந்தியாவின் தலைசிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த கவர்னருக்கு நன்றி. கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை கவர்னரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன்.
நீட் கோச்சிங் மையங்கள் கொள்ளையடிப்பதற்கு வசதியாக உள்ளது. நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்கு தான் அவை வழிவகுக்கும். நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை தேவை. கல்வி, மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதையே கவர்னரிடம் கோரிக்கையாக விடுக்கிறோம்.
மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில் கல்வி இன்னும் வளரும்; அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்” என்று கூறினார்.