ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா ? அப்போ இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!!
ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா ? அப்போ இன்று மிஸ் பண்ணிடாதீங்க..!!
தமிழ்நாட்டில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் விதமாக அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்மூலம் லட்சக்கணக்கான மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த சூழலில் ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல் ,செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் ஆகியவை நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழ்நாடு அரசினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரேஷன் குடும்ப அட்டையில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமெனில் இன்று நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் இன்று காலை 10 மணி முதல் முகாம் நடைபெறுகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் மற்றும் குடும்ப அட்டை சம்பந்தமான குறைகளுக்கு தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.