நெல்லை கலெக்டரின் செயல்.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

நெல்லை கலெக்டரின் செயல்.. மகிழ்ச்சியில் மாணவர்கள்..!

Update: 2022-03-10 16:17 GMT

அரசுப் பள்ளி மாணவர்களின் எட்டாக்கனியாக உள்ள ஐஐடி போன்ற மத்திய அரசு படிப்புகளில் சேரும் கனவை நிறைவேற்றும் வகையில், திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

திருச்சி என்ஐடி நிறுவனம் இந்த பயிற்சியை இலவசமாக அளித்து வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடிக்கு மாணவர்களை விமானம் மூலம் அழைத்துச் செல்ல திட்டமிட்டனர்.


இதையடுத்து, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கல்லணை, களக்காடு, திருக்குறுங்குடி, பத்தமடை, செட்டிகுளம், பேட்டை, அம்பை, முனைஞ்சிப்பட்டி, கூடங்குளம், ஏர்வாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 13 மாணவிகள் உட்பட 23 மாணவர்கள் இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐஐடி, என்ஐடி போன்றவற்றில் சேர்வதற்காக பயிற்சி பெற்றுவரும் இந்த ஏழை மாணவர்கள், அங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்த மாணவர்கள் இரண்டு நாள் சென்னை ஐஐடியில் இருந்தவாறு கோளரங்கம், ஆய்வகங்களை  பார்வையிட்டு அங்குள்ள வாய்ப்புகளை அறிந்து கொள்வார்கள்.

Similar News