ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ், டிக்டாக் !!

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ், டிக்டாக் !!

Update: 2022-03-07 07:30 GMT

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது. ஒருசில சிறிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள், தொடர்ந்து ஏவுகணைகளை வீசியும், வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தியும் உக்ரைனை உருக்குலைய வைத்து வருகிறது.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன. இதனால் ரஷ்யாவில் இந்த கார்டுகளை பணம் எடுப்பதற்கு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதோடுமட்டுமல்லாமல், சாம்சங், ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில், ரஷ்யாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு எதிரான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ரஷ்யாவில் எங்கள் ஒளிபரப்பு சேவையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளோம் என்று அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரஷ்யாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் டிக்டாக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவின் புதிய 'போலி செய்தி' சட்டத்தினால் எங்கள் வீடியோ சேவையில் நேரடி ஒளிபரப்பு நிறுத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என டிக்டாக் செயலி நிறுவனம் தெரிவித்தது.  

newstm.in

Tags:    

Similar News