செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புது ரூல்ஸ்.. அது என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..!
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் புது ரூல்ஸ்.. அது என்னன்னு தெரிஞ்சிக்கோங்க..!
இந்திய தபால் துறை மூலம், பெண் குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெயரில் தபால் அலுவலகங்களில் கணக்கு தொடங்கலாம்.
இந்நிலையில், இந்தத் திட்டம் தொடர்பான சில முக்கிய விதிமுறைகள் சமீபத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
1. முன்னர், 10 வயதை தாண்டிய பெண்களே செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம். தற்போது, 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தவும், செயல்படுத்தவும் முடியும்.
2. முன்பு, செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 250 ரூபாய் கட்டாயம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால், கணக்கிற்கு வட்டி வராது. ஆனால் தற்போது 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும்.
3. முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை முடிக்க முடியும். தற்போது, மெச்சூரிட்டிக்கு முன்பாகவே பெண் இறந்து விட்டாலோ, கொடிய நோயால் அவதிப்பட்டு வந்தாலோ கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
4. முன்பு, ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். தற்போதைய விதிமுறைப்படி, முதலில் இரட்டை குழந்தைகள் பிறந்து, பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால் மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம்.