உக்ரைனில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ புதிய வாட்ஸ் அப் எண் வெளியீடு..!

உக்ரைனில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ புதிய வாட்ஸ் அப் எண் வெளியீடு..!

Update: 2022-03-02 13:11 GMT

உக்ரைனில் சிக்கியுள்ள புதுச்சேரி மாநிலத்தவர்களின் விவரங்களை தெரிவிக்க, அரசு சார்பில் கூடுதலாக வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அங்கு தங்கியுள்ள புதுச்சேரி மாணவர்கள், தொழிலாளர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை பாதுகாப்பாக புதுச்சேரி அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, உக்ரைனில் தங்கியுள்ளவர்களின் விவரங்களை சேகரிக்க புதுச்சேரி அரசு சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் மற்றும் வாட்ஸ் அப் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று, புதிதாக 94448 60663 என்ற வாட்ஸ் அப் எண் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, உக்ரைனில் சிக்கித் தவிப்போரின் விவரங்களை தெரிவிக்க மேற்குறிப்பிட்ட புதிய வாட்ஸ் அப் எண்ணை பயன்படுத்தலாம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News