வெடித்து சிதறிய புது புல்லட்..! வைரல் வீடியோ
வெடித்து சிதறிய புது புல்லட்..! வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், குண்டகல்லுவில் அருகே உள்ள கசாபுரம் ஆஞ்சநேய சுவாமி கோயில் உள்ளது. இந்தநிலையில், மைசூரை சேர்ந்த ரவிச்சந்திரா என்பவர் யுகாதி பண்டிகையை முன்னிட்டு இந்த கோயிலுக்கு தனது புதிய புல்லட்டில் சென்றுள்ளார். குண்டக்கல்லில் உள்ள கசாபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் புதிதாக வாங்கப்பட்ட புல்லட் வானத்திற்கு பூஜை செய்யப்பட்டது. அப்போது திடீரென்று தீப்பிடித்த நிலையில், தீயை அணைக்க முற்பட்ட போது புல்லட் வெடித்து சிதறியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவிச்சந்திரா செய்வதறியாமல் திகைத்து நின்றார். புல்லட் வண்டி எரிந்துகொண்டிருப்பதை கண்ட பொதுமக்கள் யாரும் கிட்ட நெருங்கவில்லை. இந்நிலையில், சற்றும் எதிர்பாக்காத நொடியில் புல்லட் வண்டியின் பெட்ரோல் டேங்க் வெடித்து மின்னல் வேகத்தில் காற்றில் பறந்தது. தீயும் குபீரென கிளம்பியதால் சம்பவத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தவர்களும் அலறி அடித்து ஓடினர்.
சிலர் எச்சரித்து தண்ணீர் ஊற்றியதால் தீ வேறெங்கும் பரவாமல் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது நீண்ட நேரம் நிற்காமல் ஓட்டி வந்ததால் வாகனம் உஷ்னம் தாங்காமல் தீ பிடித்து வெடித்ததா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வெகு தூரம் வண்டியை ஓட்டி செல்பவர்கள் வழியில் அடிக்கடி ரெஸ்ட் எடுத்துவிட்டு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
In a #Shocking incident, a new #BulletBike suddenly caught #fire & #exploded with a loud noise at #Guntakal area in #Anantapur dist of Andhra Pradesh. The bike was engulfed in #flames after the biker parked it infront of a temple to perform a pooja.
— Surya Reddy (@jsuryareddy) April 3, 2022
#BikeFire #AndhraPradesh pic.twitter.com/GwHlNPLusz