குதுப் மினார் விவகாரத்தில் புதிய சர்ச்சை!!

குதுப் மினார் விவகாரத்தில் புதிய சர்ச்சை!!

Update: 2022-05-23 09:51 GMT

உத்தரப்பிரதேச ஞானவாபி மசூதியை தொடர்ந்து குதுப் மினார் விவகாரத்திலும் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.

டெல்லியிலுள்ள குதுப் மினாரை குத்புதீன் ஐபக் கட்டவில்லை என்றும் சூரிய ஒளியின் திசை பற்றி ஆராய்வதற்காக ராஜா விக்ரமாதித்யா கட்டியதாகவும் தொல்பொருள் துறையின்  முன்னாள் அதிகாரி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக  27 ஹிந்து கோயில்களை இடித்து அதிலிருந்து பெறப்பட்ட பொருட்களை வைத்து குதுப் மினார் கட்டப்பதாகவும் அது விஷ்ணுவின் தூண் என்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சால் கூறியிருந்தார்.

இவர்களது கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினர் பாஜக தொடர்ந்து இஸ்லாமிய இடங்களை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டினர்.

மேலும் குதுப் மினார் பகுதியில் அகழாய்வு நடைபெற உள்ளதாகவும் தகவல் பரவியது. இந்நிலையில், குதுப் மினார் பகுதியில் அகழ்வாய்வு நடைபெறவுள்ளதாக வெளியான தகவலை மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டி மறுத்துள்ளார். அதுபோன்ற முடிவை அரசு எடுக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

newstm.in

Similar News