’கூகுள் பே’-யில் புதிய அம்சம்.. இனி ஒரு நொடியில் பணம் அனுப்பலாம் !!
’கூகுள் பே’-யில் புதிய அம்சம்.. இனி ஒரு நொடியில் பணம் அனுப்பலாம் !!
இன்றைய சூழலில் வங்கிக்குச் சென்று பணப்பரிமாற்றம் செய்வது என்பதெல்லாம் மிக மிக அரிதாகி வருகிறது. சிறு சிறு தொகைகளுக்கெல்லாம் யாரும் வங்கிகளை நாடுவதில்லை. இணைய வழியில் ஜிபே, போன் பே உள்ளிட்ட பல்வேறு வகையிலான செயலிகள் மூலமும், நெட்பேங்கிங் மூலமும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனா்.
அந்த வகையில் நவீன காலத்துக்கேற்ற வகையில் வங்கிகளில் டிஜிட்டல் சேவை வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில், உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் யூபிஐ சேவைகளில் ஒன்றாக ஜிபே இருக்கிறது. தற்போது இந்த ஜிபேயில் விரைவாக பணம் அனுப்பும் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பின் லேப்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கூகுள் நிறுவனம் ‘Tap to Pay’ என்ற அம்சத்தை ஜிபேயில் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி கடையில் பொருட்கள் வாங்குபவர்கள் ஸ்கேன் செய்வதற்கு பதில் அவர்களது போனை டேப் செய்தால் போதும். கூகுள் பேவிற்கு தானாகவே சென்று யூபிஐ பின் கேட்கப்படும். அதன்பின் யூபிஐ பின்-ஐ டைப் செய்தால் பணம் விரைவாக சென்று விடும்.
இந்த அம்சத்தின் மூலம் ஒவ்வொருமுறையும் நாம் கூகுள் பேயில் கேமராவை ஓபன் செய்து ஸ்கேன் செய்ய தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in