வருமான வரி செலுத்துவோருக்கு இனி புது விதிகள்!!
வருமான வரி செலுத்துவோருக்கு இனி புது விதிகள்!!
வருமான வரி செலுத்துவோருக்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு அண்மையில் சில அறிவிப்புகளை வெளியிட்டது.
அதில், வருமான வரி செலுத்துவோர் வரி தாக்கல் செய்யும்போது தவறுகள், விடுபடுதல் இருந்தால் அதை திருத்திக்கொள்ள கூடுதல் கால அவகாசம் கிடைக்கும். இதற்காக ‘Updated Return' என்ற புதிய அம்சத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, நீங்கள் வருமான வரித் தாக்கல் செய்தபிறகு, அதில் ஏதேனும் தவறுகள் அல்லது தகவல் விடுபட்டிருந்தால், சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் (Assessment year) இறுதியில் இருந்து ஒரு ஆண்டுக்குள் அப்டேட் செய்துகொள்ளலாம்.
யார் வேண்டுமானாலும் இந்த அப்டேட்டட் ரிட்டனை தாக்கல் செய்யலாம். எனினும், திருத்தப்பட்ட ரிட்டன் மற்றும் தாமத ரிட்டன் காலாவதியான பிறகு அப்டேட்டட் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால் வரித் தொகையில் 25% அபராதமும், வட்டியும் வசூலிக்கப்படும்.
மதிப்பீட்டு ஆண்டு முடிந்து ஒரு ஆண்டுக்குள் அப்டேட்டட் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால் 25% அபராதமும், வட்டியும் வசூலிக்கப்படும். 1 ஆண்டுக்குப் பின், 2 ஆண்டுகளுக்குள் தாக்கல் செய்தால் 50% அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in