விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு பெற புதிய திட்டம்.. இன்று முதல் அமலானது !!
விவசாயத்துக்கு இலவச மின் இணைப்பு பெற புதிய திட்டம்.. இன்று முதல் அமலானது !!
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை, வணிக பிரிவுகளில் மின் இணைப்பு பெற வாடிக்கையாளர்கள், மின் வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். தற்போது இந்த நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. அதேநேரம், தமிழகத்தில் விவசாயத்திற்கு இலவசமாக மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், விவசாய மின் இணைப்பு பெற விரும்புவோர், மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களில் நேரில் விண்ணப்பம் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயத்திற்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மின் வாரியம் நிதி நெருக்கடியில் இருப்பதால் காலதாமதம் ஆவதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு ஒப்புதல் அளிப்பதற்கு ஏற்ப ஆண்டுதோறும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், விவசாயத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பதிவு செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு, சீனியாரிட்டி அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படுகிறது. இதில், நேரடி விண்ணப்ப பதிவில் தவறுகள் நடக்கின்றன. எனவே, விவசாய மின் இணைப்புக்கும், இணையதளத்தில் விண்ணப்பிக்கும் திட்டத்தை மின் வாரியம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த முறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விவசாய பயன்பாட்டிற்கு மின்இணைப்பு பெற இனி அலுவலகத்துக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லை.
newstm.in