அடுத்த கல்வியாண்டு.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு !!
அடுத்த கல்வியாண்டு.. மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த முக்கிய உத்தரவு !!
இடையில் நின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய மாநிலம் முழுவதும் சிறப்பு கணக்கெடுப்பு நடத்தி பள்ளியில் மீண்டும் சேர்க்க உத்தரவிடப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை பள்ளிகளில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
குடும்ப சூழல், வறுமை, குடும்பம் இடமாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இடைநின்ற மாணவர்கள் பலர் பள்ளிகளில் மீண்டும் சேர்க்கப்படாமல் உள்ளனர். அதனை பெற்றோர்களும் கண்டுகொள்ளவில்லை. குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் குழந்தைத் தொழிலாளர்களாகவும் மாறியுள்ளனர். இது அவர்களின் கல்வியையும் எதிர்காலத்தையும் சிதைக்கிறது.
எனவே இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான பணிகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் முடுக்கிவிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை முடிந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போது இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கருதப்படுகிறது. கண்டறியப்பட்ட குழந்தைகளின் வாழ்விடங்களுக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்து குழந்தைகளின் தற்போதைய நிலையை பார்த்து பள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அருகாமையில் உள்ள பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கூறப்படுகிறது.
newstm.in