அடுத்த அதிர்ச்சி.. நாளை நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள் லீக்..!
அடுத்த அதிர்ச்சி.. நாளை நடைபெறவுள்ள பிளஸ் 2 தேர்வுக்கான வினாத்தாள் லீக்..!
கடந்த சில தினங்களாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்வுக்கு முன்னதாகவே 12-ம் வகுப்புக்கான உயிரியல், வணிகவியல், வணிகக் கணிதம் வினாத்தாள்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், நாளை நடைபெற உள்ள 12-ம் வகுப்புக்கான திருப்புதல் தேர்வின் இயற்பியல் வினாத்தாளும் முன்கூட்டியே வெளியானதாக புகார் எழுந்துள்ளது.
இதனையடுத்து, சமூக வலைதளங்களில் வினாத்தாள் வெளியானது குறித்து சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிகளில் இருந்து திருப்புதல் தேர்வுக்கான வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அருள்செல்வத்தை பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.