நாட்டில் கோதுமை விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.உக்ரைன் போர், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி காரணமாக நாட்டில் கோதுமை விலை 5.81% உயர்ந்துள்ளது.

சென்னையில் கோதுமை சில்லறை விலை ரூ.34, மும்பை - ரூ.49, கொல்கத்தா - ரூ.29, டெல்லியில் ரூ.27ஆக உள்ளது.இந்நிலையில் தேவை அதிகரிப்பாலும், உற்பத்தி குறைந்ததன் காரணமாகவும் கோதுமை மாவின் விலையும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

மும்பையில் கோதுமை மாவின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.49க்கு உள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இதன் விலை ரூ.32.38 ஆக இருந்தது. சென்னையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.24 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.29 ஆகவும் உள்ளது.