தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இலவசம் - தமிழக அரசு அறிவிப்பு..!
தமிழக அரசு பஸ்களில் பயணம் செய்யும் 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. 3 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், 5 வயது வரையுள்ள குழந்தைகள் இனி அரசு பஸ்களில் இலவச பயணம் செய்யலாம் என்று தமிழக சட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசு பஸ்களில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
மேலும், 5 வயதுக்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு பாதி கட்டணம் வசூலிக்கப்படும். 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருக்கை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும்; மடியில் அமர்ந்து செல்வதென்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை என்று அரசு அறிவித்துள்ளது.