செலவுக்கு கூட பணம் இல்லை.. மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை !!

செலவுக்கு கூட பணம் இல்லை.. மகனை கொன்றுவிட்டு தாய் தற்கொலை !!

Update: 2022-04-19 18:00 GMT

அம்பத்தூரில் போதிய வருவாய் இல்லாததால் மகனுக்கு விஷம் கொடுத்து விட்டு தாயும் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் பள்ளி சாலையை சேர்ந்தவர் லதா (38). இவரது கணவர் பரத்வாஜ். இவர்களது மகன் தவஜ் (14) அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். கணவன்- மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றனர்.

இதனால் வீட்டில் லதா மற்றும் அவரது மகன் மட்டும் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை லேசாக மயங்கிய நிலையில் இருந்த தவஜ் எதிரே வசிக்கும் நவநீதம் என்பவரை உதவிக்கு அழைத்து உள்ளார். நவநீதம் கதவைத் திறந்து உள்ளேசென்று பார்த்தப்போது, லதா உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் மயங்கிய நிலையில் இருந்த தவஜை உறவினர்கள் உதவியுடன் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தவஜ் உயிரிழந்தார். இதுகுறித்து அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதல்கட்ட விசாரணையில் பொருளாதார வசதி இன்றி இருந்துவந்துள்ளார். இதனால் அவர் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதன் காரணமாக லதா, தனது மகனுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் உடற்கூராய்வு அறிக்கைக்கு பிறகு, இருவர்களது இறப்பு குறித்து முழுமையான காரணம் தெரியவரும் என தெரிவித்தனர். அம்பத்தூரில் தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Similar News