மாதச் சம்பளம் இல்லை! இனிமேல் வாரச் சம்பளம் தான்!!

மாதச் சம்பளம் இல்லை! இனிமேல் வாரச் சம்பளம் தான்!!

Update: 2022-02-08 10:13 GMT

இந்தியா மார்ட் நிறுவனம் முதல் முறையாக ஊழியர்களுக்கு வார சம்பள முறையை அமல்படுத்தியுள்ளது.

கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்த ஊழியர்கள் போன்றோருக்கு வார சம்பளம், தினசரி சம்பளம் இருந்தாலும், மிகப் பெரிய நிறுவனத்தில் வார சம்பள முறையை அமல்படுத்துவது இதுவே முதல் முறை.

ஒவ்வொரு வாரத்திலும் ஊழியர்களுக்கு சம்பளத்துக்கான காசோலை வழங்கப்படும் என்று இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியும் நிறுவனருமான தினேஷ் குலாதி தெரிவித்துள்ளார்.

இது ஊழியர்களுக்கு வெகுவாகப் பயனளிக்கும். இதை வைத்து ஊழியர்கள் தங்களது பணத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பதோடு, சரியான திட்டமிடலுடன் நிதி நெருக்கடி இல்லாமல் வாழலாம் என்றும் கூறியுள்ளார்.

இந்தியாவில் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் நிலையில், இந்தியா மார்ட் நிறுவனத்தின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மற்ற முன்னணி நிறுவனங்களும் ஒவ்வொன்றாக இதைப் பின்பற்ற வாய்ப்பு உள்ளது.

newstm.in

Similar News