இனி இங்கே நோ மாஸ்க், நோ எண்ட்ரி - புதிய கட்டுப்பாடுகள் அமல்..!!

இனி இங்கே நோ மாஸ்க், நோ எண்ட்ரி - புதிய கட்டுப்பாடுகள் அமல்..!!

Update: 2022-06-17 05:00 GMT

 கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் , செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லால் கடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முகக்கவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ. 500 அபராதம் விதிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் அனைத்து பகுதியிலும் ‘நோ மாஸ்க், நோ எண்ட்ரி’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன. கண்டிப்பாக பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகக்கவசம் அணியாமல் வருகிறவர்களை நிறுத்தி கொரோனா வைரஸ் விதிகளை சுட்டி காட்டுகின்றனர்.

விமான பயணிகள் அனைவரும் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட சான்றுகளோடு தான் விமானத்தில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. கொரோனா பரிசோதனையும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் சந்தேகப்படும் பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆதார் கார்டை சுகாதாரத்துறையினர் பார்த்து முகவரி, போன் எண்களை குறித்து கொண்டு பயணிகளை வெளியே அனுப்புகின்றனர்.

Similar News