இனி கட்டணம் செலுத்த வேண்டும்.. புதிய அம்சத்துடன் 'டெலிகிராம்' !

இனி கட்டணம் செலுத்த வேண்டும்.. புதிய அம்சத்துடன் 'டெலிகிராம்' !

Update: 2022-06-11 19:05 GMT

உலகின் பிரபல செய்தி பகிரும் தளங்களில் ஒன்றாக டெலிகிராம் இருந்து வருகிறது. கோடிக்கணக்கிலான பயனர்கள் இந்த செயலியை நித்தம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சூழலில், டெலிகிராம் நிறுவனம் புதிதாக டெலிகிராம் பிரீமியம் என்ற அம்சத்தை அமல்படுத்துகிறது.

டெலிகிராம் சமீபத்தில் விளம்பரங்களை நிர்வகிக்கும் பகுதியை உருவாக்கியது. அதனடிப்படையில், தற்போது நிறுவனம் புதிய பிரீமியம் சேவையை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. புதிய பிரீமியம் சேவை அறிமுகமானால் பயனர்கள் சேவைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். பயப்பட வேண்டாம்; அனைவரும் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.

யாருக்கேனும் விளம்பரங்கள் மீது அதிக வெறுப்பு இருந்தால், அவர்கள் மாத சந்தாவை செலுத்தி, விளம்பரங்களற்ற சேவையை அனுபவிக்க முடியும். மேலும் கொண்டுவரும் புதிய அப்டேட்கள், அம்சங்கள் பிரீமியம் சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும். பிரீமியம் பயனர்களுக்கு தனி எமோஜிகளும், ஸ்டிக்கர்களும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரீமியம் அம்சங்கள் சோதனைகளில் செயல்படுத்திபார்க்கப்பட்டதாக தெரிகிறது. இந்த அம்சம் மூலம் பெரிய ஃபைல்கள் அனுப்பும் வசதி மட்டும் கட்டண சேவையாக இருக்கும். ஜூன் கடைசி வாரம் முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக டெலிகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் பயனர்களுக்கான சேவை அப்படியே தொடரும் எனவும் கூறப்பட்டுள்ளது. 


newstm.in
 

Similar News