தமிழகத்தில் மின் தடை இல்லை.. பேரவையில் மின்துறை அமைச்சர் பேச்சு..!
தமிழகத்தில் மின் தடை இல்லை.. பேரவையில் மின்துறை அமைச்சர் பேச்சு..!
தமிழக சட்டப்பேரவையில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏ மணிக்கண்ணன் கேள்விக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
“மற்ற மாநிலங்களில் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் எந்த வித மின் தடையும் இல்லாமல் சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் 17 நாட்களும், மே மாதத்தில் 6 நாட்களும் உச்சபட்ச மின்தேவை 16,000 மெகாவாட்டாக உயர்ந்த போதிலும் தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
மே 1-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை 5,94,000 யூனிட் மின்சாரம், ரூ.12 என்ற அளவில் எக்ஸ்சேஞ்ச் முறையில் கொள்முதல் செய்து மின் தேவை சரிசெய்யப்பட்டது.
உளுந்தூர்பேட்டை தொகுதியில் அரசு புறம்போக்கு இடத்தில் உள்ள வீடுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டால் தான் மின் இணைப்பு வழங்கப்படும்.
மின் இணைப்பு இல்லாத வீடுகள் பற்றிய விவரங்களைத் தந்தால், வருவாய்த் துறையுடன் பேசி மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.