சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேச தடை ?

சென்னை மாநகர பேருந்துகளில் சத்தமாக செல்போனில் பேச தடை ?

Update: 2022-06-07 12:25 GMT

மத்திய அரசு சமீபத்தில் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் செல்போனில் சத்தமாக பேசுவது, பாடல் கேட்பது போன்ற சக பயணிகளை தொந்தரவு செய்யும் செயல்களுக்கு தடை விதித்தது. இதன் தொடர்ச்சியாக கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தது.

அந்த வரிசையில், சென்னை மாநகர போக்குவரத்து பேருந்துகளில் சப்தமாக போன் பேசத் தடை விதிக்க தமிழக அரசுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் மனு அளித்திருக்கிறார். அதில், பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பது, கேம் விளையாடுவது போன்றவை சக பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால், இவற்றுக்கு தடை விதிக்கக் கோரி மனு அளித்திருந்தார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு, சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளது. அதில், பேருந்துகளில் பாடல் கேட்பது, சத்தமாக செல்போனில் பேசுவது, வீடியோ கேம் விளையாடுவது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Similar News