இந்த விழாவில் கலந்துகொள்ள தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை..!
இந்த விழாவில் கலந்துகொள்ள தடுப்பூசி சான்றிதழ் தேவையில்லை..!
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் சமர்ப்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டின் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, அனைத்து நாடுகளிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் பல நாடுகளில் பொது இடங்களுக்கும், விழாக்களுக்கும் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 27-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வோர் கொரோனா தடுப்பூசி சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.