ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நோக்கியா நிறுவனம் !!

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது நோக்கியா நிறுவனம் !!

Update: 2022-04-12 18:45 GMT

உக்ரைன் மீது ரஷ்யா 48ஆவது நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு தடைகளை உலக நாடுகள் ரஷ்யாவுக்கு விதித்து உள்ளன. அதில் மேலும் ஒரு அடியாக அமெரிக்காவின் பண பட்டுவாடா நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்டு ஆகியவை ரஷ்யாவில் தங்களுடையை சேவையை நிறுத்தி உள்ளன.

இதனால் ரஷ்யாவில் இந்த கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முடியாத நிலை ரஷ்ய மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும்பல்வேறு நிறுவனங்கள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் சேவையை நிறுத்தியுள்ளது. எனினும் உக்ரைன் மீதான தனது தாக்குதலை ரஷ்யா நிறுத்தவில்லை. உக்ரைன் முழுமையாக உருக்குலைந்து வருகிறது. அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு வருகின்றனர். 

இதன் எதிரொலியாக ரஷ்யாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தின. இந்த நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனமும் 5 ஜி தொழில்நுட்ப விநியோக நிறுவனமான நோக்கியா, ரஷ்ய சந்தையில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வரும் நிலையில், தற்போது நோக்கியோ நிறுவனமும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.

பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா, தனது மொத்த வணிகத்தில் 2 சதவீதம் மட்டுமே ரஷ்யாவின் பங்களிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இதனால் தனது ஆண்டு வர்த்தகத்தில், இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதோடுமட்டுமல்லாமல், அமேசான் வர்த்தக நிறுவனம், நெட்பிளிக்ஸ், சாம்சங், ஆப்பிள், சோனி, கூகுள், டிஸ்னி, யூனிவர்செல், டிக்டாக், INTEL, BMW, FORD, HONDA உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கெனவே ரஷ்யாவில் தங்கள் சேவையை நிறுத்தியுள்ளன.

newstm.in

Tags:    

Similar News