கட்சி சார்பற்ற முறையில்.. எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!
கட்சி சார்பற்ற முறையில்.. எம்பி, எம்எல்ஏக்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!
தமிழகம் முழுவதும் இன்று ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, திருவள்ளூர் வடகரை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, முதல்வர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் 10-ம் வகுப்பு மாணவர்களுடன் அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்தும் முறையை கவனித்தனர். தொடர்ந்து, பள்ளியின் சமையல் அறை உள்ளிட்ட இடங்களில் முதல்வர் ஆய்வு செய்தார்.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பினையும் சுகாதாரத்தையும் உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதில், பள்ளி வளாகங்களில் உள்ள கழிவறை தொட்டிகள் மூடியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். குடிநீர் தொட்டிகள் முறையாக சுத்தம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதை கண்காணிக்க வேண்டும் என ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், கட்சி சார்பற்ற முறையில் எம்பி, எம்எல்ஏ, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பள்ளிகளின் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும். அப்படி ஆய்வு செய்யும்போது ஏதாவது குறைபாடுகளை கண்டறிந்தால் கலெக்டரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கினார்.