இந்தியாவில் வாராக்கடன்கள்.. 6 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !!

இந்தியாவில் வாராக்கடன்கள்.. 6 ஆண்டுகளில் இல்லாத அளவு சரிவு !!

Update: 2022-07-12 19:32 GMT

வங்கிகளின் வாராக்கடன்களின் மொத்த அளவு 6 ஆண்டுகளில் இல்லாத அளவு 5.9 சதவீதமாக சரிந்துள்ளது. 2022 மார்ச் இறுதியில் பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் வாராக்கடன்களின் மொத்த அளவு 5.9 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடத்தக்க நாடுகளின் பட்டியலில் வாராக்கடன் விகிதத்தில் இந்திய முன்னிலையில் உள்ளதாக கேர் எட்ச் நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

அதாவது, தென் ஆப்பிரிக்காவில் வாராக்கடன் விகிதம் 5.2 சதவீதமாகவும், பிரான்சில் 2.7 சதவீதமாகவும், இந்தோனேஷியாவில் 2.6 சதவீதமாகவும், சீனாவில் 1.8 சதவீதமாகவும் உள்ளது. பிரிட்டனின் வாராக்கடன் விகிதம் 1.2 சதவீதமாகவும், அமெரிக்காவில் 1.1 சதவீதமாகவும் மிகக் குறைந்த அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டியலில் ரஷ்யா 8.3 சதவீத வாராக்கடன்களுடன் முதல் இடத்தில் உள்ளது.

அதேபோல் இந்தியாவில் எந்ததெந்த பிரிவில் வாரக்கடன் அதிகம்  எனவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் விவசாயத்துறையில் வாராக்கடன்களின் அளவு 9.4 சதவீதமாகவும், உற்பத்தித்துறையில் 8.4 சதவீதமாகவும், சேவைத்துறையில் 5.8 சதவீதமாகவும் உள்ளதென கேர் எட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 
newstm.in

Tags:    

Similar News