அசைவ உணவு சாப்பிட அனுமதியில்லை.. அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி..!
அசைவ உணவு சாப்பிட அனுமதியில்லை.. அறநிலையத்துறை அமைச்சர் அதிரடி..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய பாஜக உறுப்பினர் சரஸ்வதி, “கோவில்களில் பணிபுரிபவர்கள் அசைவம் சாப்பிடுகிறார்கள்..?; கோவில் நகைகளை உருக்குவதில் எவ்வளவு பணம் கிடைக்கிறது..?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, “கோவில்களில் பணிபுரியும் அலுவலருக்கு அசைவம் பரிமாறப்படுவது இல்லை. அப்படி சாப்பிடுவதாக இருந்தால், அதற்கு தடையை ஏற்படுத்துவதற்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம்.
அறங்காவலர் இருக்கும் திருகோவில்களில் தங்கங்களை உருக்கலாம் என்று நீதிமன்றமே தெரிவித்துள்ளது. மேலும், அதன் அடிப்படையில் மூன்று மண்டலங்களாக பிரித்து நீதிபதிகள் நியமிக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில் நகைகளை உருக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவில் நகைகளை உருக்கிய பணத்தை வங்கியில் செலுத்துவதன் மூலம் கோடிக்கான வருமானம் அக்கோவில்களுக்கு கிடைக்கும்” என்று தெரிவித்தார்.