தற்போதும் இல்லை.. இனி வரும் காலங்களிலும் இருக்காது.. மின்துறை அமைச்சர் தகவல்..!

தற்போதும் இல்லை.. இனி வரும் காலங்களிலும் இருக்காது.. மின்துறை அமைச்சர் தகவல்..!

Update: 2022-04-19 04:45 GMT

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை; இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது என, சட்டப்பேரவையில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று, கோடை காலத்தில் மின்சார தேவை குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.

இதற்கு பதில் அளித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில், “கோடை காலத்தில் தேவைப்படும் மின் தேவையை கருத்தில் கொண்டு அனல்மின் நிலையங்களில் பற்றாக்குறையை போக்க 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி செய்ய டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அந்த நிலக்கரி வந்துவிடும்.

தமிழகத்தில் இந்த கோடை காலத்தில் மின் பற்றாக்குறை 2,500 மெகாவாட்டாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆகையால், தேவையை பூர்த்தி செய்ய 3,000 மெகாவாட் மின்சாரம் பெற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது மின்வெட்டு இல்லை; இனி வரும் காலங்களிலும் மின்வெட்டு இருக்காது” என்றார்.

Similar News