கடவுள் காலில் விழுந்தால் எதுவும் கிடைக்காது.. மிஷ்கின் சர்ச்சை பேச்சு..!

கடவுள் காலில் விழுந்தால் எதுவும் கிடைக்காது.. மிஷ்கின் சர்ச்சை பேச்சு..!

Update: 2022-03-19 16:49 GMT

மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘செல்ஃபி’. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு வெளியிடுகிறார்.

‘செல்ஃபி’ படத்தின் இயக்குனர் மதிமாறன், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றியுள்ளார். அத்துடன், வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்திற்கு திரைக்கதை எழுதியிருந்தார்.

இந்நிலையில், ‘செல்ஃபி’ படத்தின் இசை மற்றும் போஸ்டர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் மிஷ்கின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் வெற்றிமாறன் பேசுகையில், “மதிமாறன் என்னுடைய சொந்தக்காரர்தான். மதிமாறனின் அப்பா தான் எனக்கு பெயர் வைத்தார்.

மதிமாறன் என்னுடைய சொந்தக்காரர் என்பதால் என்னுடன் சேர்த்துக் கொள்ளாமல் இருந்தேன். ஆனால், அவருடைய திறமையைப் பார்த்த பிறகு என்னுடைய படங்களில் சேர்த்துக் கொண்டேன்” என்று கூறினார்.

இதையடுத்து மிஷ்கின் பேசுகையில், “என் நண்பன் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மதிமாறனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் மேடை இது.

மதிமாறன் முகத்தில் அந்த வெற்றி தெரிகிறது. தற்போது தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவருடைய பட்டறையில் இருந்து வந்த மதிமாறனும் வெற்றிப் படங்களை கொடுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

சாமி காலில் விழுந்தால் எதுவும் கிடைக்காது; ஆனால், நல்ல சினிமா எடுப்பவர்கள் காலில் விழுந்தால் நல்ல சினிமா கிடைக்கும். மேலும், மதிமாறன் நல்ல கதை உள்ள படத்தை எடுத்தால் கண்டிப்பாக நான் அவர் காலில் விழுவேன்” என மிஷ்கின் கூறினார்.

கடவுள் காலில் விழுந்தால் ஒன்றும் கிடைக்காது என்பது போன்ற சர்ச்சை கிளப்பும் பேச்சை மேடையில் பேசுவது சரிதானா..? என, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

Similar News