இனி, 15 நாட்களில்‌ கிடைக்கும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

இனி, 15 நாட்களில்‌ கிடைக்கும்.. அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு..!

Update: 2022-03-23 11:42 GMT

“குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌” என, அமைச்சர சக்கரபாணி தெரிவித்துள்ளார்.‌

தமிழக சட்டப்பேரவையில்‌ நேற்றைய கேள்வி நேரத்தின் போது எழும்பூர்‌ திமுக எம்‌எல்‌ஏ பரந்தாமன்‌, “திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு குடும்ப அட்டைகள்‌ பெறுவதற்காக விண்ணப்பிக்‌கப்பட்ட மனுக்கள்‌ எத்தனை..? வழங்கிய கார்டுகள்‌ எத்தனை..?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர்‌ சக்கரபாணி, “திமுக அரசு பொறுப்பேற்றால்‌, குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும் தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌ என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

அந்த வகையில்‌, தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்‌ 2021-ம்‌ ஆண்டு மே மாதம்‌ 7-ம்‌ தேதி பொறுப்பேற்றவுடன்‌, 2021 மே மாதம்‌ முதல்‌ கடந்த 14-ம்‌ தேதி வரையான 10 மாதங்களில்‌ 15,74,543 விண்ணப்பங்கள்‌ குடும்ப அட்டை வழங்ககோரி பெறப்பட்டது.

இது பரிசீலிக்கப்பட்டு, தகுதியுடைய விண்ணப்பதாரர்கள்‌ 10,92,064 பேருக்கு புதிய குடும்ப அட்டைகள்‌ வழங்கி சாதனை படைத்திருக்கிறது. குடும்ப அட்டை வேண்டி யார்‌ விண்ணப்பித்தாலும், தகுதியுள்ள நபருக்கு 15 நாட்களிலே குடும்ப அட்டை வழங்‌கப்படும்‌” என்று கூறினார்.

Similar News