சிலிண்டர் மானியம் பெற இனி இது கட்டாயம் !

சிலிண்டர் மானியம் பெற இனி இது கட்டாயம் !

Update: 2022-07-04 18:51 GMT

நாட்டில் சுமாா் 30 கோடி போ் சமையல் எரிவாயு இணைப்பைப் பெற்றுள்ளனா். சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், மத்திய அரசு மானியம் அறிவித்துள்ளது. 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமையல் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதற்கு சில விதிமுறைகள் உண்டு அதாவது, உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மட்டுமே மத்திய அரசு தெரிவித்துள்ள மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மானியம் பெற ஆதார் கார்டு வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல அந்த வங்கி கணக்கை சிலிண்டர் கணக்குடன் இணைத்திருக்க வேண்டும். உங்களது சிலிண்டர் நிறுவனத்தின் இணையதளம் மூலமாக இதனை எளிமையாக செய்யலாம். அல்லது SMS மூலமாகவும் சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபல் நம்பரிலிருந்து சிலிண்டர் விநியோகஸ்தருக்கு SMS அனுப்பி ஆதாரை இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை சுமாா் ரூ.1,000-ஆக இருக்கும் நிலையில், உஜ்வாலா திட்டப் பலனாளா்களுக்கு மானியமாக ரூ.200 கிடைக்கும். அதனால், அவா்களுக்கு எரிவாயு சிலிண்டரின் விலை சுமாா் ரூ.800-ஆக மட்டுமே இருக்கும். அவா்களுக்கு மானியம் வழங்குவதன் மூலமாக சுமாா் ரூ.6,100 கோடி கூடுதலாக செலவாகும் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்


newstm.in
 

Similar News