இனி பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.!!

இனி பஸ்களில் மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும்.!!

Update: 2022-07-06 09:05 GMT

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டில் பாதிப்பு அதிகமாவதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது .

இந்நிலையில்,  சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-  

  • சென்னை மாநகரப் பஸ்களில் பயணிப்போர் முகக்கவசம் அணிந்திருப்பதை நடத்துநர்கள் உறுதி செய்ய வேண்டும். 
  • பேருந்துகளில் நடத்துநர், ஓட்டுநர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். 
  • போக்குவரத்துப் பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • பொதுஇடங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News