#BIG NEWS :- இனி, மின் கட்டணத்துடன் இந்த கட்டணமும்.. மாநகராட்சி நிர்வாகம் திட்டம்..!

#BIG NEWS :- இனி, மின் கட்டணத்துடன் இந்த கட்டணமும்.. மாநகராட்சி நிர்வாகம் திட்டம்..!

Update: 2022-02-05 13:51 GMT

வீடுதோறும் சென்று திடக்கழிவுகளை சேகரிப்பதற்கு கட்டணம் வசூலிக்க, பெங்களூரு மாநகராட்சி நீண்ட நாட்களாக திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு மாதந்தோறும் குறிப்பிட்ட இலக்கில் வசூலிக்க கருத்துகள் கேட்கப்பட்டது.

தற்போது, வீட்டு கழிவுகளை சேகரிக்க கட்டணம் நிர்ணயிக்க, நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து மாநகராட்சி நிர்வாகம் அனுமதி பெற்றுள்ளது. இந்த கட்டணத்தை 'பெஸ்காம்' எனப்படும் பெங்களூரு மின் வினியோக நிறுவனத்துடன் இணைந்து வசூலிக்க உள்ளது.

இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; “மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் கழிவுகளை பராமரிக்க 800 கோடி ரூபாய் வரை திடக்கழிவு மேலாண்மையில் செலவிடப்படுகிறது.

தற்போது, கழிவுகளை சேகரிக்க கட்டணம் வசூலிக்கப்படுவதால், குறைந்த பட்சமாக 200 முதல் 300 கோடி ரூபாய் வரை வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்சமாக, வீடுகளுக்கு 30 ரூபாய் நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தை மின் கட்டணத்துடன் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு காத்திருக்கிறோம். எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியிடப்படலாம்” என்று அவர்கள் கூறினர்.

Similar News