மாணவியுடன் நிர்வாணமாக வீடியோ கால்... பாஜக முன்னாள் நிர்வாகி கைது !

மாணவியுடன் நிர்வாணமாக வீடியோ கால்... பாஜக முன்னாள் நிர்வாகி கைது !

Update: 2022-06-11 19:50 GMT

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் கேட்டரிங் மற்றும் நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் போதிய பாதுகாப்பு கட்டமைப்பு இல்லை எனக்கூறி அதிகாரிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு சீல் வைத்தனர். பின்னர் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி கல்லூரி தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 

இந்த கல்லூரியில் கிராம புற மாணவர்களே அதிகம் படித்து வருகின்றனர். இந்த சூழலில், கல்லூரி சேர்மன் ஜான் கிரேஸ் என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு அதே கல்லூரி மாணவியிடம் அத்துமீறியதாக கூறப்படுகிறது. அதாவது மாணவியிடம் வீடியோ காலில் நிர்வாணமாக பேசி ஆபாசமாக நடந்து கொண்டார் என புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ தற்போது அந்த கல்லூரி மாணவிகள் மத்தியில் பரவியதால் பெரும் பரபரப்பு எழுந்தது. பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கல்லூரி சேர்மன் ஜான் கிரேஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து  மாணவிகள் கல்லூரி முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் அறிந்து வந்த நகர் காவல் துறையினர் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், மாணவிகள் கலைந்து செல்ல மறுத்ததுடன் சேர்மன் ஜான் கிரேஸை கைது செய்ய வேண்டும், எங்களது பாதுகாப்பை கருத்தில்கொண்டு சான்றிதழை திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் கட்டிய பீஸை திரும்ப வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 

இதனிடையே போலீசார் சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸை வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்புதல் உள்ளிட்ட இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை திரும்ப அளிக்க கோரிக்கை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதால் மாணவிகள் தர்ணாவை கைவிட்டனர். 

மேலும், கைதான கல்லூரி சேர்மன் தாஸ்வின் ஜான் கிரேஸ் முன்னாள் பாஜக முன்னாள் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 

Similar News