ஓசி சரக்கு, சைடிஷ் கேட்டு தகராறு... இளைஞரை அடித்து கொலை !!

ஓசி சரக்கு, சைடிஷ் கேட்டு தகராறு... இளைஞரை அடித்து கொலை !!

Update: 2022-02-13 19:15 GMT

டாஸ்மாக் பாரில் இலவசமாக மது மற்றும் சைடிஸ் கேட்டு பிரச்சினையில் ஈடுபட்ட நபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மேற்கு மாம்பலத்தில் நேற்று மாலை ஒயின்ஷாப் பாரில் நடந்த சண்டையில் இளைஞர் கோகுல்(25) என்ற நபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த கோகுலின் தந்தை குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த குமரன் நகர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் கோகுலை கட்டையால் அடிப்பது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்தபோலீசார், பார் ஊழியர்களான ராமநாதபுரத்தை சேர்ந்த செபாஸ்டியன் மற்றும் சிவகங்கையை சேர்ந்த கோபி ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
 


விசாரணையில், கோகுல் நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் டாஸ்மாக் பாருக்கு வெளியே வந்து படுத்து கொண்டதாகவும் நேற்று காலையில் இருந்தே ஓசியில் மது தருமாறு ஒயின்ஷாப் ஊழியர்களிடம் பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று மதியம் ஒயின் ஷாப் அருகில் உள்ள பாரில் தனக்கு சைடிஸ் தர வேண்டும் என கேட்டு பிரச்சினையில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் பார் ஊழியர்கள் மதுபோதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இதனால் கோபம் கொண்ட கோகுல் ஊழியர்களை தாக்க அருகில் இருந்த கற்களை எடுத்து தாக்க வந்ததாகவும் தங்களின் தற்காப்புக்காக அருகிலிருந்த கட்டையால் கோகுலை அடித்ததாகவும், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் அவரை தாக்கவில்லை எனவும் கைதுசெய்யப்பட்ட செபாஸ்டியன் மற்றும் கோபி வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட செபாஸ்டியன் மற்றும் கோபி ஆகிய இருவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மதுபான பாரில் இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


newstm.in

Similar News