ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு… 5 ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது!!

ஓ.என்.ஜி.சி குழாய் உடைப்பு… 5 ஆண்டுகள் விவசாயம் செய்ய முடியாது!!

Update: 2022-05-23 08:06 GMT

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விவசாய நிலத்தில் .என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 கருப்புகிளார் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்ற விவசாயிக்கு சொந்தமான நிலத்திற்கு அடியில் 3 ஓஎன்ஜிசி குழாய்கள் செல்கின்றன. இந்த குழாய்கள் கோமாலபேட்டை பகுதியில் இருந்து நல்லூர் பகுதி வரை செல்கின்றன.

இந்த நிலையில் சுப்பிரமணிக்கு சொந்தமான விவசாய நிலத்தில் செல்லக்கூடிய ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு அந்தப் பகுதியில் கச்சா எண்ணெய் முழுவதுமாக விளைநிலத்தில் பரவியுள்ளது.

இதனைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்தப் பகுதிக்கு வந்த காவல்துறையினர் கச்சா எண்ணெய் கொப்பளித்து வரும் இடத்திற்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என அறிவுறுத்தினர்.

மேலும் தொடர்ந்து கச்சா எண்ணெய் தொடர்ந்து வெளியேறி அருள் ராஜா என்கிற விவசாயி நிலத்திலும் பரவி விட்டது. இதன் காரணமாக அடுத்த 5 வருடங்களுக்கு முழுவதுமாக விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கச்சா எண்ணெய் பரவிய விவசாய நிலத்தில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

newstm.in

Similar News