அதிகாரிகள் லஞ்சம் கேட்டா கொடுங்க.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
அதிகாரிகள் லஞ்சம் கேட்டா கொடுங்க.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
பஞ்சாப்பில் உள்ள 117 தொகுதிகளுக்கும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. இதையடுத்து, பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார்.
அதன் பின்னர் அவர், முதலாவதாக மாநிலத்தில் உள்ள உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் உட்பட முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், “பஞ்சாப்பில் வரும் 23-ம் தேதி முதல் ஊழலுக்கு எதிராக தனி உதவி மையம் அமைக்கப்படும். அதற்காக வழங்கப்படும் எண் என்னுடைய தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணாகவும் இருக்கும்.
பஞ்சாப்பில் இனி எந்த அதிகாரி லஞ்சம் கேட்டாலும் கொடுங்கள். அப்படி கொடுக்கும்போது, அந்த அதிகாரியுடன் மேற்கொள்ளும் உரையாடலை வீடியோ மற்றும் ஆடியோவாக பதிவு செய்து எனது எண்ணுக்கு அனுப்பி வையுங்கள்.
எனது அலுவலகம் அது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும். இதன் மூலம் எந்த குற்றவாளியும் இனி தப்ப முடியாது” என்று தெரிவித்துள்ளார்.