அட கடவுளே.. அண்ணா பல்கலை. பதிவாளருக்கு ஓய்வு நாளில் வந்த சோதனை !!

அட கடவுளே.. அண்ணா பல்கலை. பதிவாளருக்கு ஓய்வு நாளில் வந்த சோதனை !!

Update: 2022-06-05 08:38 GMT

அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் என்பவர், தான் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக எஸ்.கணேசன் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர், கடந்த ஜூன் 2ஆம் தேதியுடன் ஓய்வு பெற்ற நிலையில், அன்றைய தினம் அவரை இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக விரிவுரையாளர் தேர்வுக்கான நேர்காணல் குழுவில் கணேசன் இடம்பெற்றிருந்தார். அப்போது, விதிகளுக்கு புறம்பாக தகுதியற்ற நபர்களை தேர்வு செய்ததாக இவர் மீது புகார் எழுந்தது. அதுதொடர்பான விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளராக இருந்த எஸ்.கணேசனை, ஓய்வுபெறும் நாளில் பணி இடைநீக்கம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஓய்வுபெறும் நாளன்று அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். அதேநேரத்தில் அவர் மீது ஏற்கனவே உள்ள புகார் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News