அட கடவுளே.. ஆண் குழந்தைக்காக கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்த கணவன் !!

அட கடவுளே.. ஆண் குழந்தைக்காக கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்த கணவன் !!

Update: 2022-02-10 06:45 GMT

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும், குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த கொடூர சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. அப்பெண் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் தனக்கு குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என தொடர்ந்து வேண்டுதலில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் நம்பிக்கை இல்லாத அவர், தங்களுக்கு பிறக்கப் போகும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் வைத்தியரிடம் கூறியுள்ளார். 

அவரும் சடங்குகளை செய்வதாக கூறி மறுநாள் மனைவியை அழைத்துவரும் படி கூறியுள்ளார். அந்த வகையில் சடங்குகள் செய்வதாக கூறி, கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்துள்ளார் வைத்தியர். இதனால் அப்பெண் பெரும் அவதியுள்ளார்.

இதற்கிடையே, கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இதையடுத்து,பெஷாவர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், அந்தப் பெண்ணின் தலையில் ஆணி அடிக்கப்பட்டிருந்தது. சுத்தியல் மூலம் அந்த ஆணியை அடித்திருக்க வேண்டும். அவரது தலையில் 2 இஞ்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது எக்ஸ்ரேவில் தெரிந்தது. ஆணியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என தெரிவித்தனர்.

அப்பெண்ணுக்கு பெரியளவில் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Tags:    

Similar News