இந்தியாவில் பதிவானது முதல் ஒமைக்ரான் XE பாதிப்பு..!

இந்தியாவில் பதிவானது முதல் ஒமைக்ரான் XE பாதிப்பு..!

Update: 2022-04-09 15:38 GMT

பிரிட்டனை உலுக்கி வரும் ஒமைக்ரான் புதிய வேரியண்ட்டான எக்ஸ்இ தொற்று முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை தொற்று முந்தைய திரிபுகளை ஒப்பிடுகையில் 10 சதவீதம் அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதராவில் 67 வயது முதியவர் ஒருவருக்கு ஒமைக்ரான் எக்ஸ் இ வேரியண்ட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்த இவர், தொற்று உறுதி செய்யப்பட்ட பின்னர் மும்பையில் இருந்து விமானம் மூலம் வதோதரா திரும்பியதாக இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவே, இந்தியாவில் பதிவான முதல் ஒமைக்ரான் எக்ஸ்இ வேரியண்ட் பாதிப்பாகும்.

Similar News