இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் பரவியது.. WHO எச்சரிக்கை !!
இந்தியாவில் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் பரவியது.. WHO எச்சரிக்கை !!
இந்தியாவில் கடந்த 4 வாரங்களாகத் தொற்று பரவல் அதிகரித்துள்ளதாகது. தினசரி பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருவதால் மக்கள் மீண்டும் கலக்கம் அடைந்துள்ளனர். இதனால் பல மாநிலங்களை மக்கள் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளது.
இதனிடையே, கொரோனா தீநுண்மியின் ஒமைக்ரான் பிஏ.2.75 வகை உருமாற்றம் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு (டபிள்யுஹெச்ஓ) எச்சரித்துள்ளது.
இது தொடா்பாக அந்த அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளா்களிடம் கூறுகையில், சா்வதேச அளவில் கொரோனா தொற்று பரவல் கடந்த இரு வாரங்களில் சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் 6 துணை பிராந்தியங்களுள் நான்கில் கடந்த வாரம் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பிஏ.4, பிஏ.5 உருமாற்றங்கள் அதிக அளவில் பரவி வருகின்றன.
அதேபோல், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பிஏ.2.75 வகை கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பரவல் குறித்து தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, என்றார்.
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான தமிழகத்தைச் சேர்ந்த சௌம்யா சுவாமிநாதன் ட்விட்டரில் வெளியிட்ட காணொலிப் பதிவில், பிஏ.2.75 வகை கொரோனா பரவல் இந்தியாவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 10 நாடுகளிலும் அந்த வகை தொற்று பரவி வருகிறது. இந்த வகை தீநுண்மிகள் மேலும் சில முறை உருமாற்றம் அடைய வாய்ப்புள்ளது.
ஆனால், இந்த வகைத் தொற்று மனிதா்களுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பது தொடா்பாகத் தொடா்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது, என குறிப்பிட்டுள்ளார்.
newstm.in