28ம் தேதியே.. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

28ம் தேதியே.. நகைக் கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

Update: 2022-03-24 15:30 GMT

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி நேரம்  நடைபெற்று வருகின்றன. இன்று காலை, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சட்டசபையில் பேசும்போது கூறியதாவது;

“தமிழகத்தில் பொது நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாய் நேற்று ஒரே நாளில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 5,48,000 நகைக் கடன்கள் தள்ளுபடி செய்து, ரசீது தரப்பட்டுள்ளன.

மார்ச் 31-ம் தேதிக்குள் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறியிருந்தேன். ஆனால் 3 நாட்களுக்கு முன்னதாக, மார்ச் 28-ம் தேதியே அனைவருக்கும் தள்ளுபடி ரசீதுகள் தரப்படும் என நம்புகிறேன்” என்று கூறினார்.

Similar News