கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை!!
கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை!!
சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
பால்நல்லூர் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் – ஷாலினி தம்பதிக்கு பவிஸ்கா என்ற ஒன்றரை வயது குழந்தை இருந்தது. கடந்த 7ஆம் தேதி மாலை பவிஸ்கா பக்கத்து வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது பலகாரம் சுட்டுவிட்டு தனியாக எடுத்து வைத்திருந்த கொதிக்கும் எண்ணெயில் தவறி விழுந்தது.
இதில் பவிஸ்காவுக்கு தொடையில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து குழந்தை ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பவிஸ்கா உயிரிழந்தது. தகவல் அறிந்து சென்ற ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in