தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு.. 10-ம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டு..!

தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு.. 10-ம் வகுப்பு மாணவிக்கு குவியும் பாராட்டு..!

Update: 2022-06-21 05:40 GMT

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் செல்வகுமார். இவருடைய மகள் துர்கா. இவர், திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில், தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற ஒரே மாணவி இவர் ஆவார்.

இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம்:
தமிழ் 100
ஆங்கிலம் 96
கணிதம் 87
அறிவியல் 79
சமூக அறிவியல் 86

மாணவி துர்காவை பள்ளி தாளாளர் ராமமூர்த்தி, பள்ளி தாளாளர் மருத்துவர் ராமமூர்த்தி, முதல்வர் செல்வி வைஷ்ணவி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், சக மாணவர்கள் என அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Similar News