கோர்ட் அருகே குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 13 பேர் படுகாயம்..!

கோர்ட் அருகே குண்டு வெடிப்பு.. ஒருவர் பலி.. 13 பேர் படுகாயம்..!

Update: 2022-03-09 21:40 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே இன்று மதியம் 1 மணியளவில் திடீரென குண்டு வெடித்தது. இதில் பலத்த காயமடைந்த ஒருவர் பலியானார்; 13 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் வினோத் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “உதம்பூர் நகரில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த குண்டுவெடிப்பு மதியம் 1 மணியளவில் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை” என்றார்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “உதம்பூர் தாசில்தார் அலுவலகம் அருகே இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார்.

காயமடைந்த 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். குண்டு வெடிப்புக்கு சரியான காரணம் குறித்து விரைந்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

Similar News