முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்”! வெளியீடு எப்போது?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “உங்களில் ஒருவன்”! வெளியீடு எப்போது?

Update: 2022-02-18 06:45 GMT

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் எழுதியிருக்கும் தனது சுயசரிதையான உங்களின் ஒருவன் புத்தகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுகிறார்.

இது தொடர்பாக பேசிய அவர், நான் எழுதியிருக்கும்உங்களில் ஒருவன்நூலின் முதல் பாகத்தை இம்மாத இறுதியில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளில் செய்திருக்கிறேன்.என்னுடைய 23 ஆண்டுகால வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை அதில் நான் பதிவு செய்துள்ளேன்.

இளமைக் காலம் , பள்ளிப் படிப்பு ,கல்லூரிக் காலம் ,அரசியல் ஆர்வம் ,முதலில் நடத்திய கூட்டம் , அதில் முதலில் பேசிய என்னுடைய பேச்சு , திரையுலகம் , திருமணம் , மிசா காலத்தின் தொடக்கம் வரையிலான பதிவுகள் இடம் பெற்றிருக்கிறது.

1976 வரையில் முதல் பாகமாக அதை எழுதி இருக்கிறேன். விரைவில் புத்தகக் கண்காட்சிக்கும் அது விற்பனைக்கு வரும் என்றார். பிப்ரவரி 28ஆம் தேதி நூல் வெளியீட்டு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.

இதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. ராகுல் காந்தியை வைத்து நூல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Similar News