சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..!!
சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது..!!
வைகாசி மாத பூஜையில் பக்தர்களின் தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கியது. 15 முதல் 19ம் தேதி வரை தரிசனம் செய்யலாம். வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. 15ம் தேதி அதிகாலை முதல் 19–ம் தேதி இரவு வரை பூஜைகள் நடைபெறும். இந்த நாட்களில் பக்தர்கள் தரிசனம் நடத்தலாம்.
அதற்கான ஆன்லைன் முன்பதிவு https://sabarimalaonline.org என்ற இணையதளத்தில் நேற்று தொடங்கியது. நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.