தியேட்டரில் வெறும் 20 டிக்கெட் மட்டும் விற்பனை… பிரபல நடிகை வேதனை!!
தியேட்டரில் வெறும் 20 டிக்கெட் மட்டும் விற்பனை… பிரபல நடிகை வேதனை!!
பாலிவுட்டில் பிரபல நடிகை கங்கனா ரனாவத் கதையில் தனக்கு அதிக முக்கியம் இருக்கும் படங்களையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அவரது படங்கள் பொதுவாக நல்ல வசூல் பெறும். இவர் நடிக்கும் படங்களில் அவரின் நடிப்பு குறித்துப் பரவலாகப் பாராட்டப்படும்
இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிப்பில் மே 20ஆம் தேதி 'தாக்கட்' படம் வெளியானது. இந்தப் படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த படமாக 'தாக்கட்' உருவாக்கப்பட்டுள்ளது.
தாக்கட் திரைப்படம் வெளியாகி அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே குறைவான வசூலையே பெற்று வருகிறது. இப்படம் வெளியாகி 8 நாட்கள் ஆகியும் தற்போது வரை ரூ. 3.5 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளது.
அதிலும் திரைப்படம் வெளியான 8வது நாளில் இந்தியா முழுவதும் மொத்தம் 20 டிக்கெட்டுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து திரையரங்கிற்கு ரசிகர்கள் வருகை குறைந்ததை அடுத்துப் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகிறது. ரூ.100 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் பெரிய வசூல் செய்து கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மோசமான வசூல் சாதனையைப் பெற்றுள்ளது.
newstm.in