வரும் 12-ம் தேதி நடை திறப்பு.. தினசரி 15,000 பக்தர்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்..!

வரும் 12-ம் தேதி நடை திறப்பு.. தினசரி 15,000 பக்தர்கள்.. இன்று முதல் முன்பதிவு தொடக்கம்..!

Update: 2022-02-07 18:51 GMT

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வரும் 12-ம் தேதி திறக்கப்பட உள்ளது. தினமும், 15 ஆயிரம் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலின் நடை, மாசி மாத பூஜைகளுக்காக வரும் 12-ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து தீபம் ஏற்றுகிறார்.


அன்று விசேஷ பூஜைகள் எதுவும் இருக்காது. இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். 13ம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறந்த பின் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார்.

கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெறும். 17ம் தேதி இரவு வரை நடை திறந்திருக்கும். தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் அனுமதிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை முடிவு 'நெகட்டிவ்' சான்றிதழ் மற்றும் முன்பதிவு கூப்பனுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு வர வேண்டும்.

Similar News