அதிமுக அலுவலக சீலை அகற்ற எதிர்ப்பு.. தீர்ப்பு ஒத்திவைப்பு..!
அதிமுக அலுவலக சீலை அகற்ற எதிர்ப்பு.. தீர்ப்பு ஒத்திவைப்பு..!
அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக்கோரி இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
விசாரணையில் வீடியோ, புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்தது. மேலும், ‘பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது. தற்போதும் இரு தரப்பினருக்கு இடையில் சமாதானம் ஏற்படவில்லை.
மீண்டும் பிரச்சனை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. சீல் வைத்த உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்சனைகள் ஏற்படலாம்’ என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை ஜூலை 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் காவல்துறை அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய ஓபிஎஸ் தரப்புக்கு அவகாசம் அளித்துள்ளனர்.