பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு.. வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் போராட்டம்..!

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு.. வாயில் வெள்ளை துணி கட்டி காங்கிரஸ் போராட்டம்..!

Update: 2022-05-19 13:26 GMT

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகளில் ஒருவரான  பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், பேரறிவாளன் விடுதலை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி  அறிவித்தார்.

அதன்படி, “உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளதற்கு, நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக்கொண்டு ‘வன்முறையை எதிர்ப்போம்.

கருத்து வேறுபாடுகளுக்கு கொலை செய்வது ஒரு தீர்வாகாது’ என்று எழுதிய பதாகையை கையில் பிடித்துக் கொண்டு அறப்போராட்டம் நடத்த வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சிதம்பரத்தில் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

Similar News